2025 மே 12, திங்கட்கிழமை

கைகலப்பில் மாணவன் பலி; 7 பேர் காயம்

Kogilavani   / 2020 நவம்பர் 01 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

எம்பிலிப்பிட்டிய வீரகெட்டிய வீதி, மொரயாய பகுதியில், நேற்று (31) இரவு, இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், 17 வயது பாடசாலை மாணவனொருவர் பலியாகியுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவனின் தந்தை உட்பட இருவர் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு சாராரக்கும் இடையிலான பகைக் காரணமாகவே மோதல் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X