2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

கொட்டகலையில் மற்றுமொரு அடுப்பு வெடித்து சிதறியது

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 12 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.சுந்தரலிங்கம்

கொட்டகலை பகுதியில் மற்றுமொரு எரிவாறு அடுப்பு வெடித்து சிதறியுள்ளதாக, திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் கொட்டகலை டிரேட்டன் கே.ஓ. பிரிவில் பழைய விடமைப்பு திட்டத்தில் உள்ள ஆசிரியை ஒருவரின் வீடொன்றில் இன்று (12) திகதி அதிகாலை 5.45 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.

ஆசிரியை தண்ணீர் சுட வைப்பதற்காக எரிவாயு அடுப்பை மூட்டிய போதே, இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த எரிவாயு சிலிண்டர், கொட்டகலை பகுதியில் உள்ள எரிவாயு விற்பனை நிலையம் ஒன்றில் 15 நாட்களுக்கு முன்னர்,  கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X