R.Maheshwary / 2021 டிசெம்பர் 01 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
கொட்டகலை பகுதியில் ஓட்டோ ஒன்று விபத்துக்குள்ளானதில், சாரதி சிறுகாயங்களுக்கு உள்ளானதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டகலை- ட்ரேட்டன் பகுதியிலேயே, இன்று (1) காலை 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொட்டகலை பகுதியிலிருந்து திம்புள்ளபத்தனைப் பகுதிக்கு அதிக வேகத்துடன் சென்ற ஓட்டோ, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொட்டகலை பிரதேசபைக்கு சொந்தமான லொறியில் மோதியுள்ளது.
அதிக வேகமே விபத்துக்கான காரணம் எனவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருவதாகவும் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
7 hours ago
7 hours ago
19 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
19 Jan 2026