Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 டிசெம்பர் 18 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
கொட்டகலை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், இன்று தனது 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை கொழும்பிலுள்ள பாடசாலையொன்றில் எழுதியுள்ளார்.
குறித்த மாணவனுக்கு கொழும்பு- இசிபத்தன கல்லூரியில் பரீட்சை எழுத அனுமதி வழங்கப்பட்டதாக நுவரெலியா வலயக் கல்விப் பணிமனையின் ஆரம்பக்கல்விக்குப் பொறுப்பான கல்விப் பணிப்பாளர் தேசபந்து எஸ்.செல்வராஜா தெரிவித்தார்.
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் பரீட்சை எழுத இருந்த இந்த மாணவர்,திடீர் சுகயீனம் காரணமாக நேற்று (17) கொழும்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று மாத்திரம் இந்த மாணவனை, வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு பரீட்சை எழுதிய பின்னர் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியசாலை நிர்வாகம் பணித்திருந்தது.
ஆனால் அந்த மாணவனுக்கு கொழும்பிலிருந்து மீண்டும் கொட்டகலைக்கு பயணம் செய்து பரீட்சை எழுதுவதற்கான சூழ்நிலை இருக்கவில்லை.
இதனையடுத்து வகுப்பாசிரியர் மற்றும் மாணவனின் பெற்றோர் நுவரெலியா கல்வி வலயத்தின் ஆரம்பக்கல்விக்குப் பொறுப்பான கலவிப் பணிப்பாளர் தேசபந்து எஸ்.செல்வராஜாவின் கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கிணங்க, அவர் பரீட்சைத் திணைக்கள பரீட்சை ஆணையாளர் ஜீவராணி புனிதாவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டமைக்கு அமைய, இந்த மாணவனுக்கு இவ்வாறு பரீட்சை எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
31 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
5 hours ago