R.Maheshwary / 2021 செப்டெம்பர் 22 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
கொட்டகலை நகர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயமடைந்து கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டகலை நகர உள்வீதியிலிருந்து, பிரதான வீதியை நோக்கி பயணித்த ஓட்டோவுடன் ஹட்டனிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற மோட்டர் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியது.
இதில் மோட்டர் சைக்கிளில் சென்ற இருவரும், ஓட்டோ சாரதியும் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .