2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு கொரோனா

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 31 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.சுந்தரலிங்கம்

கொட்டகலை சுகாதார பிரிவுக்குட்பட்ட சாமஸ்ட்டன் பகுதியில் 43 பேர் கொரோனா
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து, சாமஸ்ட்டன் பகுதிக்கு தடுப்பூசி
வழங்கும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாகக் கொட்டகலை பொது சுகாதார பிரிவின் பிரதேச வைத்திய உத்தியோகஸ்த்தர் வைத்தியர் கே.சுதர்சன் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி கோயில்பூசையொன்றும் மரண
சடங்கொன்றும்,பூப்புனித நீராட்டு விழா ஒன்றும் நடைபெற்றுள்ளதாகவும் இதில்
பங்கேற்றவர்களில் 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த தோட்டத்தில் சில லயக் குடியிருப்புக்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இதனால் இன்று (31) குறித்த பகுதி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையும் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

எனினும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை நிறுவு பெற்ற பின் அவர்களுக்கான தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சாமஸ்டன் பகுதி கடந்த ஐந்து தினங்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்
இதுவரை எந்த நிவாரணமும் இந்த மக்களுக்கு வழங்கப்படாததால் இம்மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X