Kogilavani / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக பாட்டசு உற்பத்தித்துறை பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக, உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கம்பஹா மாவட்டத்திலும் கண்டி மாவட்டத்திலுமே பட்டாசுக்கள் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகின்றன.
பண்டிகைக் காலங்களில் பட்டாசு உற்பத்தியாளர்கள் பாரிய இலபாமடைவது வழமை. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக பட்டாசு உற்பத்தித்துறைப் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக, உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2019ஆண்டு ஏற்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலாலும் தற்போதைய கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாகவும் பட்டாசுத்துறை பாரிய வீழ்ச்சியடைந்துவிட்டதாக துறைசார்ந்த உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள கண்டியைச் சேர்ந்த பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் பெண்ணொருவர், தான் 20 வருடங்களாக பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணியாற்றி வருவதாகவும் இங்கு சில வருடங்களுக்கு முன்பு 100 பேர் பணியாற்றியுள்ளனர் என்றும் ஆனால் தற்போது 6 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைக்கு தொழிற்சாலை நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சரத் பத்மசிறி (வயது 30) என்பவர் கருத்துரைக்கையில், தான் ஐந்து வருடங்களாக மேற்படித் தொழிற்சாலையில் பணியாற்றுவதாகவும் தன்னுடன் 30 நண்பர்கள் பணியாற்றியதாகவும் ஆனால் தற்போது தான் மட்டுமே மிஞ்சியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பீ.ஜீ.பத்மசீலி (வயது 59) என்பவர் கருத்துத் தெரிவிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களும் கொரோனா வைரஸ் தொற்றும் எம்மை இல்லாதொழித்துவிட்டன என்றுத் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துரைத்த பட்டாசு தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளரும் ஸ்ரீ லங்கா பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளருமான அதுல அல்விஸ், தற்போது பட்டாசு உற்பத்தித் தொழிற்றுறையில் பாரிய பிரச்சினைகள் நிலவுவதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இத்துறையில் சுமார் 60,000 குடும்பங்கள்வரை தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.


9 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Jan 2026