Editorial / 2020 மார்ச் 19 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ சண்முகநாதன்
நாட்டில் மிக வேகமாகப் பரவிவரும் “கொரோனா” வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுக்கும் நோக்கில், விசேட நடவடிக்கைகளை உடனடியாக அமுல்படுத்தியுள்ளதாக, கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில், “கொரோனா” வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய, சகல திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களையும் இரண்டு வார காலத்துக்குப் பூட்டி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
அத்துடன் கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில், பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கும் நிகழ்வுகளை நடத்துவதற்கும் தற்காலிகமாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றார்.
வெளிப் பிரதேசங்களிலிருந்து கொட்டகலை பிரதேசத்துக்கு வருகை தருவோர் தொடர்பான விவரங்களை உடனடியாக பிரதேச சபைக்கு அறிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்களின் சுகாதார பாதுகாப்புக்காக, கொட்டகலை நகரில் கைகளைக் கழுவிக் கொள்வதற்கான தண்ணீர், சவர்க்காரம், சிங்க் முதலான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்றார்.
எனவே வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, பொதுமக்கள் செயற்பட வேண்டும் என்றும் முறையான சுகாதாரத்தை பேணிக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வாங்குமாறும் அவர் கோரினார்.

9 minute ago
16 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
20 minute ago
1 hours ago