Gavitha / 2021 ஜனவரி 07 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்லால் சாந்தஉதய
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு, சில ஆடைத் தொழிற்சாலைகளின் முகாமைத்துவம்,மறைமுகமாக உதவுகிறது என்று, இரத்தினபுரி மாவட்ட தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் லக்மால் கொனாரா தெரிவித்தார்.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு, பொதுமக்களின் ஆதரவு தேவை என்ற அடிப்படையில், இரத்தினபுரியில், நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில். இரத்தினபுரியில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு, மாவட்டத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலைகள், வலுவாக பங்களிப்புச் செய்வதாக அவர் குற்றஞ்சாட்டினார் .
அவிசாவெல்ல தொழிற்பேட்டையிலுள்ள ஆடைத்தொழிற்சாலைகள், இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள எஹெலியகொடை, குருவிட்ட, இரத்தினபுரி உள்ளிட்ட பிற பகுதிகளைச் சேர்ந்த ஆடைத்தொழிற்சாலைகளை பார்வையிட்டதாகவும் எனினும், கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளியுடன் நேரடி தொடர்பைப் பேணி வந்தவர்கள் தொடர்பான துள்ளியமானத் தகவல்களை, ஆடைத்தொழிற்சாலைகளைின் முகாமைத்துவம் வழங்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
குருவிட்ட பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து, அந்த ஆடைத் தொழிற்சாலையின் முகாமைத்துவம், உண்மையான தகவல்களை வழங்காதமையமால், பொது சுகாதார அதிகாரிகளும் கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரிகளும் பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட நபர்களுடன் நேரடித் தொடர்பைப் பேணியோர், அவர்களுடன் தொடர்பைப் பேணிய இரண்டாம் தரப்பினர், தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பஸ்களில் பணியாற்றும் ஊழியர்கள், சில அறிகுறிகளுடன் இருக்கம் பணியாளர்கள் ஆகியோரை, உடனடியாக பரிசோதனைக்கு அனுப்புமாறு பணித்தால் மாத்திரமே, ஆடைத் தொழிற்சாலை முகாமைத்துவம், ஆரோக்கியமான தொழிலாளர்களை அனுப்பி வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுபோன்ற முடிவுகளால், பாரிய சிக்கல் ஏற்படும் என்றும் தொழிற்சாலை நிர்வாகங்கள், வேண்டுமென்றே தொழிலாளர்களை தனிமைப்படுத்த முயலாமல் உள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, பொதுசுகாதார ஆய்வாளர்கள் ஒரு ஆடைத்தொழிற்சாலைக்குச் சென்று அங்கு நோயாளர்களைக் கண்டுபிடித்தால், அந்த நோயாளியை நிர்வாகம் வேலையை விட்டு நிறுத்திவிடும் என்றும் நோயாளி வேலை செய்த பகுதி மூடப்பட்டு விடும் என்று தாங்கள் அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஒரு சில தொழிற்சாலைகள், நோய் பரவாமல் தடுக்க உதவியது என்றும் அவ்வாறு உதவி செய்யும் முகாமைத்துவத்துக்கு கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இதுவரை தொற்று ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
10 minute ago
21 minute ago
28 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
28 minute ago
47 minute ago