R.Maheshwary / 2021 செப்டெம்பர் 03 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்று வீரியமடைந்துள்ள இக்காலகட்டத்தில் கள பணியில் ஈடுபட்டு வரும் கிராம சேவகர் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்ளுக்கு கொவிட் தொற்று பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்படவேண்டும் என நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் மு.இராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளாந்தம் கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கையும் தொற்றுக்குள்ளாகி மரணமாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கொரோனா தொற்று ஆரம்பித்த காலம் முதல் களப்பணியில் கிராம உத்தியோகஸ்தர்களும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்களும் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் நாள் தோறும் பொது மக்கள் மத்தியிலே பணியாற்றி வருகின்றனர்
அந்த வகையில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2000 ரூபாய் நிவாரணப்பணமும் சமுர்த்தி மற்றும் கிராம சேவகர்களே பயனாளிகளுக்கு வழங்கி வருகின்றனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில், பெரும் அச்சத்திற்கு மத்தியிலே தமது பணியினை முன்னெடுத்து வரும் சமுர்த்தி மற்றும் கிராம உத்தியோகஸ்தர்களினதும் அவர்களது குடும்பத்தினரின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் சுகாதார தரப்பினர் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதோடு, அவர்களுக்கான சுகாதார பாதுகாப்பு அங்கிகளை வழங்கி அவர்களின் சுகாதாரப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago