Kogilavani / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், டி.சந்ரு
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில், பாதுகாப்பு உபகரண தொகுதி, நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜாவிடம், நேற்று (18) கையளிக்கப்பட்டுள்ளன.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஊடாக, இந்த உபகரணத் தொகுதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கையளிக்கப்பட்ட உபகரணத் தொகுதிகள், நுவரெலியா கல்வி வலயத்துக்கு உட்பட்ட நல்லாயன் மகளிர் கல்லூரிக்கும் எஸ்.ஓ.எஸ் சிறுவர் இல்லத்துக்கும் கையளிக்கப்பட்டுள்ளன.
நோய்த் தொற்று நீக்கிகளும் உடல் வெப்பநிலையை அளவிடும் கருவிகளுமே, இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் நுவரெலியா லயன்ஸ் கழகத்தின் அங்கத்தவர்களும் பங்கேற்றனர்.


21 minute ago
22 minute ago
26 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
22 minute ago
26 minute ago
33 minute ago