2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கோஷ்டி மோதலில் வாகனங்களுக்குச் சேதம்

Kogilavani   / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா
 
ஹாலி-எல அட்டாம்பிட்டிய பெருந்தோட்டத்தின் இரண்டாம் பிரிவில்,  உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்;த்தர்க்கம் கோஷ்டி மோதலாக மாறியதில் வீடொன்றுக்கும் வாகனங்கள் நான்குக்கும் பலத்த சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
 
இச்சம்பவம் நேற்று  (14) இரவு இடம்பெற்றுள்ளது.  
 
கோஷ்டி மோதலால் அச்சமடைந்த பல குடும்பங்கள், தேயிலை மலைகளுக்கு இடையே இரவு பொழுதை கழித்துள்ளனர் என்று தெரியவருகிறது.
 
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், இரு தரப்பினருக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து
வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
 
சேத விவரங்கள் தொடர்பில் மதிப்பிடப்படுகிறது.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X