2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

கூரைத்தகரங்களை வழங்குவதற்கு 4 இலட்சம் ஒதுக்கீடு

Kogilavani   / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வறிய குடும்பங்களின் நலன் கருதி கூரைத்தகரங்களை வழங்குவதற்காக  தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 4 இலட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக  தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன், நேற்று(24) தெரிவித்தார்.

அம்பகமுவ பிரதேச சபையின் ஊடாக ஒதுக்கப்பட்ட  2 இலட்சம் ரூபாய் நிதியினால் பெற்றுகொள்ளப்பட்ட  கூரைத்தகரங்கள் கினிகத்தேனை பிரதேச செயலாளரின் பரிந்துரைக்கேற்ப சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை கடவளை, ஹட்டன், ரொத்தரஸ், நோர்வூட் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 10 வறிய குடும்பங்களுக்கு கூரைத்தகரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்களுக்கு விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .