Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kogilavani / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஷங்கீதன்
ஹட்டன், டிக்கோயாவில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கிளங்கன் வைத்தியசாலைக்கு மகாத்மா காந்தியின் பெயரை வைக்க வேண்டுமென மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய மாகாண சபையின் மாதாந்த கூட்டம் நேற்று(20), கண்டி பல்லேகலை மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மாகாண சபை தலைவர் உதயசிறி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இக்கோரிக்கையை முன்வைத்தார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'கிளங்கன் வைத்தியசாலையானது, இந்திய அரசாங்கத்தின் 1200 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் அனைத்து வசதிகளுடனும் கூடிய வைத்தியசாலையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய மாகாண சபையோ எமது மத்திய அரசாங்கமோ எவ்விதமான நிதியையும் ஒதுக்கீடு செய்யவில்லை. முழுமையாக இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டிலேயே இவ் வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு மகாத்மா காந்தியின் பெயரை சூட்டுவது பொறுத்தமாகவும் அதேநேரத்தில் இரண்டு நாடுகளுக்குமான உறவை வலுப்படுத்தும் ஒரு பாலமாகவும் அமையும்' என்றார்.
'சிலர் இதனை இன ரீதியாக பார்க்கின்றனர். இந்திய அரசாங்கம் இலங்கையில் பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றது. இச்செயற்பாட்டின் மூலம் இன்னும் அதிகமான அபிவிருத்திகளை இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும்' என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago