Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.ஆ.கோகிலவாணி
நுவரெலியா, அம்பேவெல கிளஞ்சி தோட்டத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதால் தாம் மிகுந்த அச்சத்துடனே இரவு வேளைகளை கழிப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தோட்டத்தில் 50 குடும்பங்கள் வாழ்ந்துவருவதாகவும் இவர்கள் வாழ்ந்து வரும் லயன் காம்பிராக்களைச் சுற்றி, ஊற்றுநீரும் மண்மேடுகளும் உள்ளதால் மழைக்காலமான தற்போது தாம் மிகுந்த அச்சத்துடனே ஒவ்வொரு பொழுதுகளையும் கழிப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்படும்போதெல்லாம் தாம் தோட்ட வைத்தியசாலையிலும் பிள்ளைபராமரிப்பு நிலையத்திலும் தங்க வைக்கப்படுவதாகவும் பின்னர் மழைநீங்கியப் பின் சொந்த வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக கூறும் பிரதேச மக்கள் நீண்டகாலமாக தொடரும் இந்த அவல நிலையை போக்குவதற்கு எந்த தொழிற்சங்கவாதிகளும் அரச தலைவர்களும் இதுவரை முன்வரவில்லை என அங்கலாய்க்கின்றனர்.
கடந்த சில நாட்களாக நீடித்து வருகின்ற கடும் மழைக்காரணமாக இத்தோட்டத்தல் மண் கற்களால் அமைக்கப்பட்டிருந்த சில கட்டடங்கள் உடைந்து விழுந்துள்ளாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய தீர்வை பெற்றுகொடுக்க முன்வரவேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago