Sudharshini / 2016 ஜூன் 06 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ. ரமேஸ்
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொரின் தோட்ட பிரிவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஆண் தொழிலாளி ஒருவர், ஆபத்தான நிலையில் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று(06) காலை 11 மணியளவில் தேயிலை மலையில் புற்கள் வெட்டிக்கொண்டிருந்த போது, தேயிலைச்செடியில் கூடுக்கட்டியிருந்த குளவிகள் களைந்து வந்த இவரை தாக்கியுள்ளன.
குளவிக் கொட்டுக்கு இலக்காகி மயக்கமுற்ற நிலையில் கிடந்த இவரை மீட்டு, தலவாக்கலை, லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .