2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கோவிலில் திருட்டு

Niroshini   / 2017 மார்ச் 12 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுஜிதா

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளஹா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பத்தர காலியம்மன் கோவிலில்  இருந்த விநாயகர் சிலையும் முருகன் சிலையும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் இன்று அதிகாலை நடந்திருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

திருட்டு சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை தொடர்ந்து, இன்று மாலை குறித்த இடத்துக்கு விரைந்த லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

இதேவேளை, முருகன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த பட்டு, கோவில் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 1 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள வீதியோரத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .