Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 பெப்ரவரி 02 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். சதீஸ்
பொகவந்தலாவை டியன்சின் தோட்டத் தொழிலாளர்கள் இரண்டாவது நாளாகவும் தொழிலுக்கு செல்லாது, இன்று (2) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
ஹட்டன்- பொகவந்தலாவை பிரதான வீதியின் டியன்சின் சந்தியில் சங்கு ஊதி, ஒப்பாரி பாடல்களோடு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தொழிளர்கள், பச்சை தேயிலை கொழுந்தினை நிறுவை செய்வதற்கு தோட்ட நிர்வாகம் டிஜிட்டல் தராசினை பயன்படுத்துமாறு தொழிலாளர்களை வற்புறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் நேற்று (1) பொகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியோடு கலந்துரையாடல் ஒன்று இடம்
பெற்ற போது, தோட்ட முகாமையாளர் தொழிலாளர்களை தகாதவார்தைகளால் பேசியுள்ளார்.
எனவே, இதற்காக முகாமையாளர் மற்றும் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர்
தம்மிடம் மன்னிப்பு கோர வேண்டும் அல்லது எமது தோட்டத்தை விட்டு தோட்டமுகாமையாளர் வெளியேர வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
20 Jul 2025
20 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Jul 2025
20 Jul 2025