Editorial / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
'ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, அமைச்சர் சஜித் பிரேமதாசவை அறிவிக்காவிட்டால், அரசியலில் இருந்து அடுத்த ஐந்து வருடங்களுக்கு, தான் அரசியில் ஓய்வு பெறவுள்ளதாக, அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
கண்டியில், நேற்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
25 வருடங்கள் அரசியல் அனுபவம் கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு, தொடர்ந்து 20 வருடங்களுக்கு சேவையாற்றுவதற்கான உத்வேகம் உண்டு என்றும் இதனாலேயே, அவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்று தாங்கள் வலியுறுத்துவதாக அவர் கூறினார்.
அண்ணனிடமிருந்து தம்பிக்கும் தம்பியிடமிருந்து அண்ணனுக்கும் அதிகாரம் செல்லவேண்டும் என்று நினைக்கும் இந்நாட்டில், இவ்வாறான ஒருவர் ஜனாதிபதியாக வேண்டும் என்று எண்ணுவதில், என்ன தவறு உள்ளது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
நாட்டுக்காகவே, இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் இதனால், எதிர்காலத்தில் என்ன சவால்கள் வந்தாலும் சமாளிக்கத் தயாராக உள்ளதாகவும் கூறிய அவர், குடும்ப ஆட்சியிலிருந்து இந்த நாட்டைக் காப்பாற்றவேண்டும் என்றும் கூறினார்.
மேலும் எந்தப் பிரச்சினை வந்தாலும், 5ஆம் திகதி, குருநாகலில் தமது மாநாட்டை நடத்தவுள்ளதாகவும் அதையடுத்து, கம்பஹாவிலும் மாநாட்டை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனவே, ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளாக, அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்காவிட்டால், எதிர்வரும் 5 வருடங்களுக்கு, தான் அரசியலில் இருக்கப் போவதில்லை என்று உறுதியுடன் கூறுவதாக மேலும் கூறினார்.
45 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026