2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

R.Maheshwary   / 2022 ஜூலை 17 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கட்பட்ட பெட்ரசோ தோட்டத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் நேற்று (16) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கமைய சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் 20 மற்றும் 53 வயதுடையவர்கள் என்றும் இவர்கள் பொகவந்தலாவைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் நாளை மறுதினம் ஹட்டன் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தெரிவித்து, பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X