Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 14 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ, கெம்பியன் தோட்டப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்ந்து கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவ பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்படி, நேற்று (13) இரவு 8 மணியளவில் குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்வுக்குப் பயன்படுத்திய பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை, விசாரணைகளின் பின்னர், ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
23 minute ago
28 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
28 minute ago
44 minute ago