2025 ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை

சட்ட விரோதமாக கசிப்பு தயாரித்த இருவர் கைது

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாமி மலை ஸ்ரஸ்ப்பி தோட்டம் மற்றும் அந்த தோட்டத்தில் உள்ள ஏனைய பிரதேசங்களில் பாரிய சுற்றிவளைப்பு மேற் கொண்ட போது சட்ட விரோதமாக கசிப்பு தயாரித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவிற்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து சனிக்கிழமை (22) அன்று இவ்வாறு கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்து 95 லிட்டர் கோடா எனப்படும் திரவம் மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டு மஸ்கெலியா பொலிஸாரால் ஹட்டன் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த பட்டனர்.

நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட வேலையில் குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக் கொண்டுதலா 15000/= தண்டம் பணம் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

செ.தி பெருமாள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .