2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

Sudharshini   / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்,ரஞ்சித் ராஜபக்ஷ

பொகவந்தலாவ, பொகவான தமிழ் வித்தியாலயத்துக்கு அருகில், நீண்ட நாட்களாக சட்டவிரோதமாக  மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று (07) சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.

மேலும், மாணிக்கக்கல் அகழ்வுக்காக பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றி உள்ளனர். கைதுசெய்யபட்ட  நான்கு சந்தேக நபர்களும் பொகவான தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சந்தேக சநபர்கள் நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .