Ilango Bharathy / 2021 ஜூலை 01 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு நிலையங்களில் சாதாரண விலைக்கு
பொருள்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்தாலும் மலையகத்தின்
சில நகரங்களில் கூட்டுறவு நிலையங்களையோ, சதொச நிலையங்களையோ காண்பது மிகவும் அரிதாகவே உள்ளது.
அக்கரப்பத்தளை, டயகம, மன்றாசி மற்றும் ஹோல்புறுக் ஆகிய நகரங்களை அண்டி,
அறுபதாயிரத்துக்கும் அதிகமாக தொழிலாளர்கள் வாழ்ந்து வரும் நிலையில், குறிப்பிட்ட
நகரங்களில் சதொச விற்பனை நிலையமொன்று இன்மையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2 வருடங்களுக்கு முன்னர், மன்றாசி நகரில் சதொச நிலையமொன்று திறக்கப்பட்டாலும் அங்கு பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தமக்கு தேவையான பொருள்கைளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் நுகர்வோர் பாதிக்கப்படுவதாகவும், எனவே இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago