Ilango Bharathy / 2021 ஜூலை 01 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ், எம். கிருஸ்ணா
பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்துக்குரிய கொட்டியாகல தோட்டத் தொழிலாளர்கள்,
அத்தோட்ட நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று(30) தேயிலைத் தொழிற்சாலைக்கு செல்லும் பிரதான வாயிலை மறித்து சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பள நிர்ணயச் சபையால் தமக்கு அதிகரிக்கப்பட்ட1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பை
வழங்க, தோட்ட நிர்வாகம் 18 கிலோகிராம் கொழுந்தை பறிக்குமாறு அழுத்தம் கொடுப்பதாகவும், அவ்வாறு பறிக்காத தொழிலாளர்களின் கொழுந்தை கிலோவொன்றுக்கு 40 ரூபாய் வீதம் செலுத்த நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இச் சத்தியகிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமையின் கீழ், கடந்த 2 மாதங்களாக தோட்ட நிர்வாகத்தால் தொழிலாளர்கள் பல அழுத்தங்களுக்கு உள்ளாவதாகவும், 18 கிலோகிராம் கொழுந்தை தினமும் பறிக்காமையால் தமது கொடுப்பனவுகள் குறைக்கப்படுவதால், பொருளாதார ரீதியாக தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளதுடன் இப்பிரச்சனைக்குத் தீர்வு கோரியே இப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் குநித்து தோட்ட நிர்வாக அதிகாரிகளிடம் வினவியபோது, தொழிலாளர்களுக்கு
1,000 ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த 1,000 ரூபாய்க்காக நாளொன்றுக்கு 18 கிலோகிராம் கொழுந்தை அவர்கள் பறிப்பது அவசியமாகும்.
18 கிலோகிராம் கொழுந்தை பறிப்பதற்கான வாய்ப்பு இருந்தும் தொழிலாளர்கள் அதனை நிராகரிப்பதால், தேயிலைத் தொழில் துறை வீழச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், எமது இக் கோரிக்கையை பல தோட்டத் தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டு தொழிலில் ஈடுபடும் நிலையில், சில தொழிற்சங்கங்களின் அழுத்தங்களால் சில தோட்டத் தொழிலாளர்கள் இவ்வாறு போராட்டங்களை முன்னெடுப்பதாகத் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago