2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

சந்திரகாமம் வீதி புனரமைக்கப்பட்டுள்ளது

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 31 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.சுந்தரலிங்கம்

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மிகவும் மோசமான நிலையில் குன்றும் குழியுமாக காணப்பட்ட டயகம -சந்திரகாமம் வீதியானது, காபட் இட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.

.கடந்த காலங்களில் இந்த பாதையினூடாக மக்கள்  நடந்து கூட செல்ல முடியாத நிலைமையே காணப்பட்டதுடன்,
யரவல, சந்திரகாமம், பொயிஸ்லேண்ட், மெனிக்பாம் கால்நடை வளர்ப்பு பண்ணை உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு செல்லும் பிரதான வீதியாகவும் இந்த வீதி  காணப்பட்டது.
இந்த வீதியைப் பயன்படுத்தும் பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிய நிலையில், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டு கோளுக்கு அமைய ,சுமார் 450 லட்சம் ரூபாய்  செலவில் குறித்த பாதை காபட் இட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X