Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2020 ஒக்டோபர் 08 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
கம்பஹா மாவட்டத்தில் இருந்து சென்று, தற்போது சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் 75 மாணவர்கள் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என, பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் அதுல ஞானபால, இன்று (08) தெரிவித்தார்.
இப்பல்கலைக்கழகத்தில், கம்பஹா மாவட்டத்தில் இருந்து வந்த 75 மாணவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது என்றும் இவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இம்புல்பே பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தாலேயே, பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் அன்றாட செயற்பாடுகள், வழமைபோன்று இடம்பெற்று வருவதாகவும் இந்த நெருக்கடி நிலையை சாதாரண நிலைக்கு கொண்டு வருவதற்கு பலர் உதவி புரிந்ததாகவும் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
58 minute ago
1 hours ago