Editorial / 2026 ஏப்ரல் 07 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணி ஆணையாளர் அலுவலக அதிகாரி எனத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, பெண் ஒருவருக்கு காணி உறுதிப்பத்திரம் (ஒப்பந்தம்) தயாரித்துக் கொடுப்பதாகக் கூறி 275,000 ரூபாயைப் பெற்றுக்கொண்ட சாமிமலைப் பகுதியைச் சேர்ந்த தரகர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்: சாமிமலை, அப்கட், கவரவில பகுதியைச் சேர்ந்த நபராவர் பாதிக்கப்பட்ட பெண், நோர்வூட் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
குறித்த பெண் வசிக்கும் காணிக்கு எவ்வித சட்டபூர்வமான உறுதிப்பத்திரமோ அல்லது அனுமதிப்பத்திரமோ இல்லாத நிலையில், அவற்றுக்கான ஆவணங்களைச் தயார்த்து தருவதாகச் சந்தேகநபர் உறுதியளித்துள்ளார். இதற்காகப் பல தவணைகளில் அவர் பணத்தைப் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காணி அமைந்துள்ள நோர்வூட் கிராம அலுவலரின் அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்காக, கிராம அலுவலருக்கு வழங்க வேண்டும் எனக் கூறி மேலதிகமாக 45,000 ரூபாய் பணத்தைச் சந்தேகநபர் கோரியுள்ளார். அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஐரபி சந்திக்கு வந்திருந்த போதே, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர் கையும் மெய்யுமாகப் பிடிபட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
15 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
46 minute ago
1 hours ago