Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Kogilavani / 2017 ஒக்டோபர் 12 , பி.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
எதிர்வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு, பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு, இம்மாதச் சம்பளத்தை எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு, நுவரெலியா மாவட்ட மலையக ஆசிரியர்கள் மற்றும் தமிழ் அரச பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வழமையாக, ஆசிரியர்களுக்கு 20ஆம் திகதியும் ஏனைய அரச ஊழியர்களுக்கு 25ஆம் திகதியுமே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
எனினும், எதிர்வரும் 18ஆம் திகதி தீபாவளி பண்டிகை என்பதால், அதனைக் கொண்டாடுவதற்கு உதவியாக, இம்மாத சம்பளத்தை மட்டும் முன்கூட்டியே வழங்குமாறு, ஆசிரியர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தாம் மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பியிருப்பதால் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதில் சிக்கல் நிலையை எதிர்கொண்டிருப்பதாக, அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட தரப்பினர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
11 Jul 2025
11 Jul 2025