Kogilavani / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளப் பேச்சுவார்த்தை கட்டம் கட்டமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், இந்தப் பேச்சில் முன்வைக்க வேண்டிய விடயங்கள் தொடர்பிலான சில நிபந்தனைகளை மலையக மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
இதற்கமைவாக, அடிப்படைச் சம்பளம் 1,000 ரூபாய் என்பதிலேயே பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இந்த நாட்டின் நாடாளுமன்றம், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் ஆகியோரின் ஏகோபித்த தீர்மானமான தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் சம்பள உயர்வை, தோட்டக் கம்பனிகள் வழங்க மறுப்பதானது, இவர்கள் அனைவரையும் அவமதிக்கின்றச் செலாகவே பார்க்க வேண்டியுள்ளதாக, மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பேராசிரியருமான சங்கரன் விஜயசந்திரன் சாடியுள்ளார்.
தொடர்ந்துரைத்த அவர், சம்பளப் பேச்சு கட்டங்கட்டமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளமாகவும் அதற்கு ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே, இந்தப் பேச்சுவார்த்தை அமைய வேண்டும் என்பதே, மலையக மக்கள் முன்னணியின் கோரிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
அத்தடன் தோட்டத் தொழிலாளர்கள் 18 கிலோகிராமுக்கு மேலதிகமாக பறிக்கின்ற ஒவ்வொரு கிலோகிராம் கொழுந்துக்கும் 55 ரூபாய் வீதம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தமது கட்சி இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் சம்பளப் பேச்சுவார்த்தை இம்முறை வெளிப்படைத் தன்மையாக இருக்க வேண்டும் என்றும் கையெழுத்திடும் தொழிற்சங்கங்களும் வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பேச்சுவார்த்தைகளின் போது ஊடகங்கள் பங்கேற்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் இதன்போதே பேச்சுவார்த்தையின் வெளிப்படைத் தன்மையை மக்கள் அறிந்துகொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
1,000 ரூபாய்க்கும் குறைவான அடிப்படைச் சம்பளத்துக்கு தொழிற்சங்கங்கள் கையெழுத்திடுமாக இருந்தால் அது வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற துரோகமாகவே கருதப்படும் என்றார்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago