Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Janu / 2023 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய பிரஜை போல் நடித்து நாடு முழுவதும் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து வந்தவர் கண்டி தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டியில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் (Casamara) இரண்டு நாட்களாக தங்கியிருந்து கட்டணத்தை செலுத்தாமல் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பிலான முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேக நபரை கண்டி தலைமையக காவல்துறையின் சுற்றுலாப் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர் இலங்கையை ச்சேர்ந்த தமிழர் என்பது தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக கண்டி தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் விசாரணையின் போது, சந்தேக நபர் நாடு முழுவதும் மேற்கொண்ட பாரிய மோசடிகள்பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகியுள்ளன.
சந்தேக நபர் சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்ல விசா தயார் செய்து தருவதாக கூறி இந்திய பிரஜை போல் நடித்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் அவர் ஆங்கிலம் மற்றும் தமிழ்மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.
சந்தேக நபர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதான ஆண்கள் பாடசாலையில் கல்வி பயின்ற பேராதனை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
இச் சந்தேக நபருக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் 30 முறைப்பாடுகள் உள்ளதாகவும், பல பொலிஸ் பிரிவில் 22 பிடியாணைகள் இருப்பதாகவும் சந்தேக நபரின் அடையாள விபரங்கள் நாடளாவிய ரீ தியில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ஷேன்செனவிரத்ன
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago