Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான அழைப்பு ஐனாதிபதியிடம் இருந்து வந்திருந்தாலும் சர்வகட்சி அரசாங்கத்தின் வடிவம் தொடர்பாக எவ்வித தெளிவுபடுத்தலும் இது வரை கிடைக்கவில்லை என்று கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
நேற்று (31) அக்குறணை- ஸாஹிரா தேசிய பாடசாலையில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
இந்த சர்வகட்சி அரசாங்கம் இன்று இருக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வை தருமா? எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலே எரிபொருளுக்காக நிற்கின்ற வரிசைகளுக்கு முடிவு கட்ட முடியுமா? என கேள்வி எழுப்பினார.
இதனை நாங்கள் மட்டும் கேட்கவில்லை . சர்வதேசமும் கேட்கின்றது. உலக வங்கி கேட்கின்றது. ஐ.எம். எப் நிறுவனம் கேட்கின்றது. அதைத் தான் நாங்களும் கேட்கின்றோம் என்றார்.
பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கு அல்லது மக்களின் பிரச்சினைக்கு இந்த சர்வகட்சி அரசாங்கம் தீர்வு தருமாக இருந்தால் அது தொடர்பாக நாங்கள் பேசலாம். அது தொடர்பாக நாங்கள கலந்துரையாடலாம் என்பதையே தாம் ஜனாதிபதிக்கும் இந்த அரசாங்கத்திற்கும் தெளிவு படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .