2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

சிறுத்தை தாக்கியதில் ஒருவர் படுகாயம்

Editorial   / 2022 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலைவாஞ்ஞன் 

தலவாக்கலை பகுதியில்  சிறுத்தை ஒன்று தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த சம்பவம் பேரிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவாக்கலை மல்லிகைப்பூ தோட்டத்தில் இன்று (05) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,  இன்று (05) காலை சுமார் 7 மணியளவில் வீட்டில் இருந்தோர் வெளியேறு சந்தர்ப்பத்தில் சிறுத்தை  ஒன்று வீட்டுக்குள் புகுந்து கட்டிலின் அடியில் மறைந்திருந்துள்ளது.

  சிறுத்தைபின்  காலடிகளை இனங்கண்டுகொண்ட குடும்பத்தினர் டோர்ச் லைட் ஒன்றினை எடுத்து வீட்டினுள் தேடிய போது திடீரென சிறுத்தை பாய்ந்து தோள்பட்டை, கைகளையும் காயப்படுத்தி உள்ளது.

கடும் காயங்களுக்கு உள்ளான குறித்த நபர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

தாக்குதல்களை மேற்கொண்ட அந்த சிறுத்தை வீட்டினுள் இருப்பதாகவும் இதுகுறித்து பொலிஸாருக்கும் வன இலாகா பிரிவு அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  சிறுத்தையை மயக்கமடைய செய்து அதனை வெளியில் எடுக்கும் பணியினை வன இலாகா அதிகாரிகள்,மற்றும் மிருக வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .