2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சவால்களை முறியடித்துக்கொண்டு “தனிவீட்டுத் திட்டம் தொடரும்”

Kogilavani   / 2017 ஏப்ரல் 11 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

“மலையக மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள், சவால்களை முறியடித்துக் கொண்டு முன்னெடுக்கப்படும்” என்று, மத்திய மாகாண உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை, பெரும் சவால்களுக்கு மத்தியிலேயே முன்னெடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

“மலையகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக, தோட்டப் பகுதிகளில் புதிய கிராமங்கள் இன்று அமைக்கப்பட்டு வருகின்றன. பல சவால்களுக்கு மத்தியிலேயே, புதிய கிராமங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

காழ்ப்புணர்வாளர்கள், பல்வேறு இடையூறுகளை திரைமறைவில் செய்கின்ற போதும் அமைச்சர் திகாம்பரத்தின் தற்துணிவினால், இந்த வீடமைப்புத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

இதற்குத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பக்கபலமாகவுள்ளனர்.

மலையத்தில் முன்னெடுக்கப்படுகின்ற வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் என்பன, தொழிலாளர்கள் மத்தியில் ஒற்றுமையைப் பலப்படுத்தும் வகையில் செயற்படுத்தப்படுவதால், இந்தத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களுக்கான வீடுகளை, மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனேயே கையளிக்கின்றோம்.

அற்ப சொற்ப சலுகைகளை வழங்கியும் பொய் வாக்குறுதிகளை கூறியும், இனியும் மலையக மக்களை ஏமாற்ற முடியாதென்பதை, இன்றைய மலையக சமூகம் நன்கு உணர்த்தியுள்ளது.

ஆகவே, மலையக மக்களுக்கான உரிய வேலைத்திட்டங்களை, தமிழ் முற்போக்குக் கூட்டணி நேர்மையுடன் முன்னெடுக்கும்” என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .