Editorial / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்க்கட்சி என்றால் எதிர்க்கும் கட்சி என எல்லோராலும் கூறப்படுகின்றது எனத் தெரிவித்த நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் மு.இராமச்சந்திரன், அந்த சிந்தனையை நோர்வூட் பிரதேச சபையினூடாக இல்லாதொழிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், மக்களிள் நலன் சாராத விடயங்களுக்கும் சூழலுக்குத் தீங்கிழைக்கும் திட்டங்களுக்கும், முழுமையான எதிர்ப்பை வெளியிடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், "அரசியல் என்பது சாக்கடை என்று தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளது. அது அவ்வாறல்ல. அது பூக்கடை என்பதை, நாமெல்லாம் ஒன்றிணைந்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நோர்வூட் பிரதேச சபையின் ஊடாக நிரூபிக்கவேண்டும்" என்றும் அவர் கோரியுள்ளார்.
நோர்வூட் பிரதேச சபையின் 2018ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு, புளியாவத்தை கலாசார மண்டபத்தில், இன்று (10) காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
"நமது நாட்டை பொறுத்தவரையில், பல சபைகளின் செயற்பாடுகள் கறைபடிந்தவையாகவே இருக்கின்றன. இன்னும் சில சபைகள், முதலமர்வுக்கு முன்னதாகவே கறைபடிந்துவிட்டன. இவையெல்லாம் எமக்கு ஒரு சாபக்கேடாகும் என்பதை நினைவுப்படுத்த விரும்புகின்றேன்" என்று குறிப்பிட்டார்.
புதிய சபையாக உள்ள இச்சபைக்கு, புதுமுகங்களாகத் தாங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், பிரதேச சபைகளுக்குக் கீழான சட்டதிட்டங்கள், நடைமுறைகள், வரையறைகள் உள்ளிட்ட பல விடயங்களில் போதிய அனுபவமில்லை என்பதைத் தெரிவித்ததோடு, அவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டுமெனவும், அதற்கான ஏற்பாடுகளை, தவிசாளர் உட்பட அனைவரும் மேற்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
5 minute ago
13 minute ago
16 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
16 minute ago
18 minute ago