Ilango Bharathy / 2021 ஜூலை 09 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
கொரோனாத் தொற்றாளர்கள் உள்ள சிகிச்சை நிலையமொன்றுக்கு, கஞ்சா,பீடி மற்றும் புகையிலை ஆகியவற்றைக் கொண்டுச் செல்ல முற்பட்ட சந்தேக நபர் ஒருவரை காவத்தைப் பொலிஸார் நேற்று முன்தினம்(6) கைது செய்துள்ளனர்.
காவத்தை - வெல்லத்துரயில் அமைந்துள்ள தேசியக் கல்வியற் கல்லூரி கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு இவற்றை எடுத்துச் செல்ல முயற்சித்த போதே, சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 3 கிராம் கஞ்சா, இரண்டு பீடிக்கட்டுகள், ஒரு தீப்பெட்டி மற்றும் ஒரு புகையிலைக் கட்டு ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.
இதேவேளை, இச்சந்தேக நபர் இவற்றை யாருக்கு எடுத்துச் சென்றார் என்பது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
37 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
2 hours ago