2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

சிறுபான்மை கட்சிகள் ’விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும்’

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

கடந்த காலங்களில், பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டு இருக்கின்றன என்றும் எனவே, பொதுத் தேர்தலிலும் அந்த புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் இருக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில், நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மலையகத்தில் போட்டியிட வேண்டுமாக இருந்தால், அது எங்களுக்கு ஒரு பிரச்சினை இல்லை என்றும், ஆனால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை, மக்களே தீர்மானிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் என்பது, சிறுபான்மை மக்களைப் பொருத்தவரையில் மிக முக்கியமான ஒரு தேர்தல் என்றும் இந்தத் தேர்தலில், சிறுபான்மை மக்களுடைய பிரதிநிதித்துவம் எந்தவகையிலும் குறையாத வண்ணம் சிறுபான்மை கட்சிகள் செயற்பட வேண்டும் என்பதுதான், தன்னுடைய எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்தார்.

பொதுவாகவே இந்தத் தேர்தலில், சிறுபான்மை மக்கள் எக்காரணம் கொண்டும் தங்களுடைய பிரதிநிதித்துவத்தைக் குறைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அது சிறுபான்மை மக்களையே பாதிக்கும் என்றும் தெரிவித்ததுடன், குறிப்பாக சிறுபான்மை கட்சிகளுக்கிடையே ஓர் இணக்கபாடு இல்லாமல் முரண்பாடான கருத்துகளைத் தெரிவிப்பதோ அல்லது கருத்துகளை வெளியிடுவதோ, காத்திரமான ஒரு விடயமாக அமையாது என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .