2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சிறுமியுடன் வீட்டில் இருந்த சிறுவன் கைது

Freelancer   / 2023 மார்ச் 14 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணத்திலக்க

14 வயதான சிறுமியை வீட்டுக்குள் தடுத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் அச்சிறுமியின் காதலனான 16 வயதான சிறுவனும் அச்சிறுமியும் ​தொம்பஹாவெல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வருமாறு தனது காதலியை காதலன் அழைத்துள்ளார். சிறுமி தரம் 9இல் கல்வி பயில்பவர் என்றும் அச்சிறுவன் தரம் 10இல் கல்வி பயில்பவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

தனது காதலனின் அழைப்பை ஏற்று காதலியும் வீட்டுக்கு வந்துள்ளார். இதுதொடர்பில் அக்கம் பக்கத்தினர் வழங்கிய தகவல்களின் பிரகாரம் இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அச்சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் சோதனைக்கு உட்படுத்துவதற்காக,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான மாணவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X