2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

சிறுவனின் சடலம் மீட்பு

Kogilavani   / 2021 பெப்ரவரி 18 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

மகாவலி ஆற்றிலிருந்து 16 வயது சிறுவனின் சடலத்தை, நாவலப்பிட்டி பொலிஸார், நேற்று முன்தினம் மாலை மீட்டுள்ளனர்.

நாவலப்பிட்டி, பவ்வாகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.ஆதித்தியன் என்ற சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி சிறுவன், செவ்வாய்க்கிழமை (16) வீட்டிலிருந்து நாவலப்பிட்டி நகருக்குச் சென்றுள்ள நிலையில், மீண்டும் வீடு திரும்பாததால், சிறுவனை தேடும் பணியில் குடும்பத்தவர்கள் ஈடுபட்டுள்ளதுடன் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையிலேயே சிறுவனின் சடலம், மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் ஸ்தலத்துக்குச் சென்று சிறுவனின் சடலத்தை மீட்டுள்ளதுடன் பிரேதப் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X