2026 ஜனவரி 21, புதன்கிழமை

சிறுவனின் மரணத்தில் மர்மம்; நீதிக் கோரி வீதிக்கு இறங்கிய மக்கள்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 03 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்தகுமார்

இரத்தினபுரி- பம்பரலகந்த தோட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன், கடந்த 25ஆம் திகதி தன்னுயிரை மாய்த்து உயிரிழந்துள்ள நிலையில், குறித்த மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அது தொடர்பில் முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு தெரிவித்து, பம்பரலந்த தோட்டத்தில் நேற்று (2) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த மரணம் கொலையாக இருக்கலாம் என்றும் இத தொடர்பில் சில நபர்கள் மீது தமக்கு சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்து, சிறுவனின் உறவினர்கள் வேவல்வத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் பொலிஸார் முன்னெடுக்கவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே சிறுவனின் மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அழுத்தம் விடுத்து, நேற்று தோட்ட மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வேவல்வத்த பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்குமிடையில் அமைதியின்மை ஏற்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X