Ilango Bharathy / 2021 ஜூலை 28 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்,சேஹ்ன் செனவிரத்ன
தேசிய ரீதியில் பாடசாலையை விட்டு இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை 6 சதவீதமாக இருந்தாலும் பெருந்தொட்டங்களில் இது 18 சதவீதமாகக் காணப்படுவதாகத் தெரிவித்த மத்திய மாகாண ஆளுநர் லலித்.யூ.கமகே,இதற்கான பிரதான காரணம் வீட்டு வேலைகளுக்காக மாணவர்கள் செல்வதாகும் என்றார்.
நேற்று முன்தினம் (27) கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு
கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,
சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில், மத்திய மாகாணத்தில் உள்ள பல்வேறு தரப்பினருடன் விசேட கலந்துரையாடல் ஒன்று அடுத்த சில நாள்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
பாடசாலை செல்லும் வயதில் வேலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் குறித்து விசேட கவனம்
செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ள அவர், ஒரு சம்பவம் நிகழும் வரை காத்திருக்காமல்
பொறுப்பான தரப்பினர் முன்கூட்டியே சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்தால்
ஹிசாலினியின் மரணம் போன்ற சம்பவங்களைத் தடுக்கலாம் என்றார்.
7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026