R.Maheshwary / 2021 செப்டெம்பர் 19 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
ஐ.நா மனித உரிமைகள் தொடர்பான அமர்வுகள் இடம்பெற்று வரும் இன்றைய சூழ்நிலையில் அநுராதபுர சிறைச்சாலை சம்பவம் கண்டிக்கதக்கதும், அதேநேரத்தில் இலங்கைக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் செயலாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசியல் கைதிகள் தொடர்பாக தீர்மானம் ஒன்றை எடுக்கும் வகையில் ஜனாதிபதி ஆலோசனை குழுவை நியமித்து அவர்களின் பரிந்துரைகளை கோரியுள்ள நிலையில், நடைபெற்ற இந்த சம்பவம் அரசியல் கைதிகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி இருப்பதோடு, இவர்களின் விடயம் தொடர்பாக அரசாங்கம் அரசியல் காய் நகர்த்தலையே செய்கின்றது.
ஜெனிவா மாநாடு நெருங்குகின்ற சூழ்நிலையில், ஜனாதிபதி அமைத்துள்ள ஆலோசனை குழு கேள்விக்குரியாகியுள்ளது.
எனவே, தம்மை அநுராதபுர சிறைச்சாலைகளிலிருந்து யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் என கைதிகளின் கோரிக்கையை, உடனடியாக பரீசிலனை செய்து அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
32 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
4 hours ago