2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

சிறையிலிருந்து தப்புவதற்கு நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்தவர் பலி

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 28 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

பள்ளேகல திறந்த வெளி சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற இருவருள் ஒருவர், விக்டோரியா நீர்த்தேக்கத்துக்குள் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மற்றைய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் ஒரு வருடத் தண்டனையின் கீழ், தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவரே இவ்வாறு தப்பிச் செல்வதற்காக, விக்டோரியா நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்துள்ளனர்.

இதன்போது பாணந்துறையைச் சேர்ந்த 34 வயதான சந்தேகநபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், மினுவாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த மற்றொரு நபரே தப்பிச் சென்றுள்ளதாகவும் இவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பள்ளேகல சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X