Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 09 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலை குறைவாக காணப்பட்டாலும் அவை நுகர்வோருக்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக, அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக சங்கத்தின் தலைவர், அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நேற்று (8) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,
மரக்கறிகளை விநியோகிக்கும் முறையில் சில சிக்கல்கள் காணப்படுவதால், இவ்வாறு
நுகர்வோருக்கு அதிக விலைக்கு விற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதென்றார்.
அத்துடன், தற்போது மரக்கறி விற்பனைத்துறையில் அனுபவம் உள்ளவர்கள் இந்த மரக்கறி
விற்பனையில் ஈடுபடுவதில்லை என்றும் மாறாக தொழில்வாய்ப்பை இழந்தவர்களே இந்த
நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
பொருளாதார மத்திய நிலையங்களை மூடுவதால் வியாபாரிகளுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் நட்டமே ஏற்படுகிறது. எனவே மொத்த வர்த்தகத்தக்கு பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பது சிறந்தது என்பதே தமது சங்கத்தின் நிலைப்பாடு என்றார்.
32 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
4 hours ago