2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

சிவனடியை தரிசிக்கச் சென்ற 18 பேர் கைது

R.Maheshwary   / 2022 ஜனவரி 09 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரஞ்சித் ராஜபக்ஸ

சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்காகச் சென்ற 18 இளைஞர்கள் நேற்று (8) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் ரயில் நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே, குறித்த 18 இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக, ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் ஸ்டுவட் என்ற மோப்ப நாயின் ஒத்துழைப்பும் பெறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யபட்ட சந்தேகநபர்கள் 20- 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், இவர்கள் அநுராதபுரம், பாணந்துறை மற்றும் கொழும்பு உள்ளிட்ட பகுதிகைளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ள ஹட்டன் பொலிஸார், சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X