2026 ஜனவரி 28, புதன்கிழமை

சிவனொளிபாதமலை யாத்திரிகர்கள் மீது குளவி கொட்டு

Janu   / 2026 ஜனவரி 25 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பன்னிபிட்டிய பகுதியில் இருந்து சிவனொளிபாதமலையை தரிசனம் செய்ய வந்த ஆறு பேர், குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சனிக்கிழமை (24) மாலை இடம்பெற்றுள்ளது.

சிவனொளிபாதமலைக்கு செல்லும் பிரதான வீதியின் ரத்து அம்பலம் பகுதியில் வைத்து குறித்த அறுவர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் அவசர ஆம்புலன்ஸ் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் நால்வர் ஆண்கள் எனவும் இருவர் பெண்கள் எனவும் குறித்த  அனைவரும் 20 வயது முதல் 33 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. 

செ.தி.பெருமாள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X