Kogilavani / 2020 டிசெம்பர் 29 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா, எஸ்.கணேசன்
2020-2021 ஆண்டுக்கான சிவனொளிபாதமலையின் பருவகாலம், பௌர்ணமி தினமான இன்று செவ்வாய்க்கிழமை (29) ஆரம்பமாகியது.
இதனையொட்டி, பெல்மதுளை கல்பொத்தாவலை ஸ்ரீ ரஜ மகா விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சமன் தெய்வத்தின் திருவுருவச் சிலை, ஆடை, ஆபரணங்கள் தாங்கிய இரத பவனி, நேற்று (28) இரவு சிவனொளிபாத மலையை வந்தடைந்தது.
இரத பவனி இரத்தினபுரி- கினிகத்தேனை, பெல்மதுளை- பலாங்கொடை, பெல்மதுளை- இரத்தினபுரி, பெல்மதுளை- இரத்தினபுரி ஆகிய நான்கு வழிகளின் ஊடாக, சிவனொளிபாத மலையடிவாரமான நல்லதண்ணியை நேற்று (28) முன்தினம் மாலை வந்தடைந்தது .
சுகாதர விதிமுறைகளுக்கமைய மட்டுப்படுத்தப்பட்ட அளவினரே, இதில் கலந்துகொண்டனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக யாத்திரிகர்கள் சிவனொளிபதமலைக்கு வருவதைத் தவிர்க்குமாறு நுவரெலியா மாவட்ட கொரோனா ஒழிப்பு குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிவனொளிபாதமலை பருவகாலம் ஆறுமாத காலமாகும் என்பதுடன் 2021 ஆண்டு மே மாத மௌர்ணமி தினத்தன்று முடிவடையவுள்ளது.



7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago