2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சீதா எலிய சீதையம்மன் கோவிலுக்கு தியான மண்டபம்

Freelancer   / 2023 ஏப்ரல் 17 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். கே. குமார் , டி.ஷங்கீதன்

நுவரெலியா சீதா எலிய ஸ்ரீ  சீதையம்மன்  ஆலயத்தில் தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இடம்பெறவுள்ளது.

இந்த வைபவம் எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  முற்பகல் 11 மணிக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சீதாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலய பரிபாலன சபையின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும்.

இந்திய டெல்லி ரொட்டரிக் கழக டெல்லி சிட்டி கழகத்தினரின் அனுசரணையுடன் இந்திய நாட்டைச்  சேர்ந்த திருமதி அனுஸ்ரீ ஜெயின் குப்தா குடும்பத்தவர்களின் ஞாபகார்த்தமாக இந்த தியான மண்டபம் அமைக்கப்பபடவுள்ளது.

அன்று ஸ்ரீ சீதையம்மன் ஆலய வரலாற்றுச்சான்று முத்திரை வெளியீட்டு விழாவும்  ஸ்ரீ சீதையம்மன் ஆலய தீர்த்தக்குளம் திறப்பு வைபவமும்  நடைபெறும்.

இவ் வைபவத்தில்  பிரதம அதிதியாக பிரதமர் திணேஷ் குணவர்தனவும் விஷேட அதிதியாக இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் சிறப்பு அதிதியாக உதவி இந்திய உயர்ஸ்தானிகர் கலாநிதி எஸ். ஆதிரா உட்பட ஆலய நிர்வாக சபையினரும் பொது மக்களும் கலந்துக்கொள்வார்கள்.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X