2026 ஜனவரி 21, புதன்கிழமை

‘சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வர வேண்டும்‘

Ilango Bharathy   / 2021 ஜூன் 22 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். கிருஸ்ணா

டிக்கோயா- கிளங்கன் ஆரார வைத்தியசாலையையும், சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாத்தளை, நாவலப்பிட்டி உள்ளிட்ட பல
வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கிளங்கன்
வைத்தியசாலையை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரப்படாமை கவலைக்குரிய
விடயமாகும் என்றார்.

எனவே, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் ஓரளவு நவீன மயப்படுத்தப்பட்டுள்ள குறித்த
வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வந்து, இங்க காணப்படும்
குறைகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X