Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 02 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட 7 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த,
சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு இதுவரை கொவிட் 19 தடுப்பூசி எதுவும்
வழங்கப்படவில்லை என, கொட்டகலை பிரதேச சபைத் தவிசாளர் ராஜமணி பிரசாந்த்
தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் கொவிட் 19 முதலாம், இரண்டாம் டோஸ் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் துரிதப்படுதப்பட்டிருந்த போதிலும், திம்புள்ள, மவுண்ட்வேர்ணன், வட்டகொடை, கிரேட்வெஸ்டன், ட்ருப், கூம்வூட், தெவிசிரிபுர ஆகிய 7 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு இதுவரை எந்த விதமான தடுப்பூசியும் ஏற்றப்படாமல் உள்ளது என்றார்.
மேற்படி தடுப்பூசியை விரைவில் பெற்றுக் கொடுக்குமாறு, தோட்ட உட்கட்டமைப்பு மற்றும்
சமுதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் எம். ராமேஸ்வரன் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
மேலும், கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குள் இதுவரை, 10 க்கு மேற்பட்ட கொரோனா
மரணங்கள் சம்பவித்துள்ளதோடு, 100 க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, நகரங்கள் மட்டும் அண்டிய பிரதேசங்களில் தொடர்ந்து தொற்று நீக்கும் வகையில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, தடுப்பூசி ஏற்றுதல் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago